அக்காலத்தில் இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை ‘திருஅருட்பா’ என்று கூறுவது சமயக்குரவர்களை அவமதிப்பதாகும் என்று யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் கடுமையாக எதிர்த்து வந்தார்
. கடலூர் மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். தீர்ப்பு நாவலருக்கு எதிராக முடிந்தது. எனினும்’அருட்பா?மருட்பா?’ விவாதம் தொடர்ந்தது.
இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே ஆறுமுக நாவலரும், வள்ளலாரும் மறைந்தனர்
.எனினும் ஆறுமுக நாவலரின் மாணவர் கதிர்வேல் பிள்ளை தொடர்ந்து அருட்பாவை எதிர்த்து வந்தார்.
அவர் கூற்றில் நியாயம் இல்லை என்பதையறிந்த பாவலர், கதிர்வேலுக்கு எதிர்வேலாகக் களத்தில் குதித்தார். தம் வாதத் திறமையால் அருட்பா அணியை வெற்றிக்குக் கொண்டு வந்தார்.
ஓர் இஸ்லாமியப் புலவர் சைவ சமய வாதிகளுக்கிடையே நுழைந்து, அவர்களது குதர்க்க வாதங்களைத்தம் தருக்கவாதத் திறமையால் தகர்த்துத் தவிடு பொடியாக்கியதைப் பாராட்டி காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
அவரது இனிய சொற்பொழிவைப் பாராட்டி ‘ தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் ‘ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பாவலரை யானை மேல் அமர்த்தி நகர்வலம் செய்வித்தனர். காஞ்சி ஆலயத்தார் ஓர் இஸ்லாமியப் புலவருக்கு பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு பாவலரையே குருவாக ஏற்றுக்கொண்டார் திரு.வி.க. பாவலர் என் குருத்தானத்தில் இருக்கிறார்
. இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை என் குரு கதிரைவேற்பிள்ளை ‘மருட்பா’ என்ற பொழுது, அவருக்கு எதிராகப் பாவலர் ‘ அவை அருட்பாதாம் ‘ என்று சொற்பொழிவாற்றினார்.
அவருடைய சொற்பெருக்கை நான் குறிப்பெழுதிக்கொண்டு போய் என் குருவிடம் காட்டுவேன் இப்பொழுதுஎன் குரு இறந்து விட்டதால் தமிழ் மரபுப்படி அவருடைய எதிரியாகிய பாவலர் தாம் என் குருவாகின்றார்.என்று தம் நாட்குறிப்பில் எழுதினார்.
பாவலர் அவதானக் கலையிலும் சிறந்து விளங்கினார்.
1907 மார்ச் 10-சென்னை விக்டோ ரியா மண்டபத்தில் சதாவதானத்தை அரங்கேற்றினார்.
வித்துவான் கண்ணபிரான் முதலியார் தலைமைதாங்கினார்.
காஞ்சி மகாவித்துவான் இராமசாமி நாயுடு, தஞ்சாவூர் சதாவதானி சுப்பிரமணிய ஐயர், பச்சையப்பன்கல்லூரித் தமிழ்த் துறை தலைவர் திருவேங்கடசாமி நாயுடு, புலவர் கா.நமச்சி வாய முதலியார் திரு.வி.க. , டி.கே.சி., முதலிய தமிழறிஞர்களும், இந்து சுதேசமித்திரன் ஆசிரியரான ஜி.சுப்பிரமணியஐயரும்,திரளான மக்களும் பார்வையாளர்களாக இருந்தனர்.
இந்த அவதானம் வெற்றி முழக்கோடு முடிந்ததை முன்னிட்டு பாமாலைகளும், பூமாலைகளும்,பொன்னாடைகளும் சாற்றப்பட்டன.
நிகழ்ச்சிக்குக் காரணமாக இருந்த இட்டாபார்த்தசாரதி தங்கத் தோடாக்கள் இட்டுப் பாராட்டினார்.
சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் ‘ மகாமதி ‘ பட்டம்வழங்கினார். தலைவர் ‘ சதாவதானி ‘ பட்டம் வழங்க, ‘ மகாமதி சதாவதானி ‘
செய்குதம்பிப் பாவலர்வாழ்க’ என அரங்கமே மகிழ்ச்சி ஆராவாரம் செய்தது.
பாவலர் வெறும் வாய்ச்சொல் வீரர் அல்லர். அன்றைய, ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார்.
1920நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார்.
அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையிலேயேநடந்தன.
“1937ஆம் ஆண்டில் என நினைக்கிறேன் , பாவலர் நாகர்கோயில் நகராண்மைக் கழகத் திடலில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார்.
நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் பெருமையை விளக்கினார்.
அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்”என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர்வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.
பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர்.நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும்இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்டிருந்தார். அவரது விடுதலைப் போராட்டத்தின்காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர். இதைக் கேட்ட பாவலர் நகைத்தார்
. நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த இவருக்கு இது ஒரு பொருட்டோ ?
பாவலர் இறுதியாக உரையாற்றிய இடம் தஞ்சாவூர்.
அப்போது அங்கு சொன்னார்; தாம் தஞ்சாவூருக்கு வந்திருப்பது, தம் சாவூருக்கு வந்திருப்பதாக சிலேடையாகக் கூறினார். அதன் பிறகுஅவர் நீண்ட நாள் வாழவில்லை.