Monday, May 3, 2010

Latest news about pavalar

Tamil Nadu Printer Friendly Page   Send this Article to a Friend

“Read works of Sathavadhani Seigu Thampi Pavalar”

Staff Reporter

HOMAGE: Tourism Minister N. Suresh Rajan who unveiled the portrait of Sathavadhani Seigu Thampi Pavalar at Thazakudi on Friday.

Nagercoil: The Tourism Minister, N.Suresh Rajan has urged the younger generations follow the principals and the ideals and go through literary works of Sathavadhani Seigu Thampi Pavalar.

Unveiling the portrait of Pavalar to mark his 101th birth anniversary celebrations organised by the Department of Information and Public Relation at Government Higher Secondary School at Thazakudi on Friday, he said that Pavalar was a multi-faceted personality. He was one of the Tamil poets of Madurai Tamil Sangam. He was born on July 31, 1874 in Edalakudy near Nagercoil. He learnt Arabic language in his early age and was a disciple of Sankaranarayana Pattariar, a Tamil scholar lived in Kottar. He was well versed in ‘Kamba Ramayana’.

In the year 1859, he worked as the editor of two Tamil magazines namely ‘Yatharthavadhi’ and ‘Islamic Mithran’ in Chennai. He wrote and published books, including Deavalogathu criminal case, Vedantha vivahara criminal case and also wrote commentaries of ‘Seerapuranam’, which contained 5,027 poems.On 10th March 1907, he conducted ‘100 Avadhanams’ successfully in the presence of 1,000 persons and got the title ‘Sodasavadhani’.

Several titles like Devamirtha Prasanka Kalanchiyam’, Tamil Perunkadal, Kalai Kadal, Mahamathi, Allama etc., were conferred on him. Among his disciples Sasthankutty Pillai and Parakkai Manickavasagam Pillai were famous.

The Minister further said that he was also a great freedom fighter. He took part in India’s freedom struggle and he was involved in untouchability movement.

Memorial built

A memorial has been constructed in honour of the Pavalar at his birthplace.

The Government has allotted the sum of Rs.6 crore for the construction of 219 school buildings under ‘education for all’ scheme throughout the district. Works for the construction of 191 school buildings had already been completed and the remaining works would be completed at the earliest.

Regarding the transfer of four doctors from Kanyakumari Government Medical College Hospital to some other places, the Minister said that the AIADMK had no right to interfere with the Government decision.

It was during the previous AIADMK regime, the Government introduced a ban on recruitment to government service.

There was no job security and the contract system was introduced during the AIADMK period. When the DMK came to power, the Chief Minister, M.Karunanidhi withdrew the ban order, thereby giving employment to thousands of qualified unemployed youths. The Government has spent the sum of Rs.7.5 crore for the purchase of surgical instruments and for setting up of an accident care and treatment centre centre at Kanyakumari Government Medical College Hospital at Asaripallam.

Sub-way to be ready

Work on the pedestrian sub way linking Anna bus stand, Meenakshipuram and Nagercoil municipal park would be completed within the stipulated time and thrown open to the public at the earliest, the Minister said.

Regarding e-stamping launched recently by the Government, the Minister said that this scheme was introduced in all the corporations and it would be further extended to municipality and civic bodies. The District Revenue Officer, Kalai Selvan, and others participated the meeting.

 

Printer friendly page  
Send this article to Friends by E-Mail

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 18:40:30 | Permalink | Comments Off

Thursday, November 12, 2009

PAVALAR – ANANDA VIKATAN

சதாவதானி

07/02/2009 at 8:12 pm (சதாவதானி)

Pavalar
கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர். சுற்றிலும் நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள். அவரை நோக்கி கேள்விக் கணை கள் நீள்கின்றன. வந்து விழுகின்ற கேள்விகளுக்கு எல்லாம் சுளீர் பதில்கள் தெறிக்கின்றன அவரிடமிருந்து. தன்னிடம் கேள்வி கேட்ட 100 பேருக்கும் ஒரே மூச்சில் வரிசையாகப் பதில் சொல்லி அசத்த… கூடி நின்ற அறிஞர்கள் கூட்டம் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடுகிறது.

சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார். 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாள் சொன்னால், அடுத்த நொடி கிழமையைச் சரியாகச் சொல்வார். அவர்தான் செய்குத் தம்பிப் பாவலர். அதிசயிக்கவைக்கும் சாதனைத் தமிழர். அவருக்குத் தபால் தலை வெளியிட்டுக் கௌரவித்திருக்கிறது மத்திய அரசு!

அடுத்தடுத்து பெரிய எண்களை வரிசையாகச் சொன்னால், அவற்றின் கூட்டுத் தொகை, பெருக்குத் தொகைகளை உடனே சொல்வது, நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது கொடுக்கப்படும் நீரை ருசி பார்த்துவிட்டு, இறுதியில் அது எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சரியாகச் சொல்வது, நிகழ்ச்சியின் இடையில் தன் மீது வீசப்பட்ட நெல்மணிகள், பட்டாணிகள், கற்கள் எத்தனை என கணக்குச் சொல்வது என இவர் ஆச்சர்யங்களால் நிறைந்தவர்.

இப்படி எட்டு விஷயங்களை நினைவில் வைத்துச் சொல்வதற்கு அஷ்டாவதானி என்று பெயர். பத்து என்றால் தசாவதானி. இவர் இப்படி 100 விஷயங்களை நினைவில் வைத்து, ஒரே மூச்சில் திரும்பச் சொல்லக் கூடியவர் என்பதால் ‘சதாவதானி’.

செய்குத் தம்பிப் பாவலர் இந்தச் சாதனையை நிகழ்த்தி 100 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதைப் போற்றும் விதமாக தமிழக அரசு இவர் எழுதிய நூல்களை நாட்டுடமை ஆக்கி உள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது. சென்னையில் வசிக்கும் பாவலரின் மகள் பாத்திமா பீவியைச் சந்தித்தேன்.

”கன்னியாகுமரி மாவட்டம் கோட் டார் பக்கத்தில் உள்ள இடலாக்குடிதான் அப்பாவுக்குச் சொந்த ஊர். மலையாள வழியில் பள்ளிப் படிப்பைப் படிச்சாலும், அவருக்குத் தமிழ் மேலதான் காதல். வீட்டு வறுமைக்கு இடையில் திண்ணைப் பள்ளிக்கூடத்துல தமிழ் கத்துக்கிட் டார். 15 வயதிலேயே செய்யுள் எழுதும் அளவுக்கு தமிழில் புலமை. பிறகு மாதம் 60 ரூபாய் சம்பளத்துக்குப் பிழை திருத்தும் வேலை பார்த்துக் கிட்டே சீறாப் புராணத்துக்கு உரை எழுதினார். ‘யதார்த்தவாதி’, ‘இஸ்லாமிய மித்ரன்’னு ரெண்டு பத்திரிகைகளையும் நடத்தியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்துதான் தசாவதானம், சதாவதானம்னு பல சாதனைகளைச் செய்தார். சென்னை விக்டோரியா ஹாலில் தசாவதானம் செய்தபோது ‘தசாவதானி’ பட்டம் கொடுத்தாங்க. திரு கோட்டாற்று பதிற்றுப் பத்தந்தாதி, கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், அழகப்பக்கோவை, நாகைக் கோவை என ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். விடுதலைப் போராட்டத்திலும் கலந்துக்கிட்டிருக்கார்.

அந்நிய நாட்டுத் துணிகள் எரிப்புப் போராட்டத்தில் அப்பா பேசும்போது, ‘ஒரு நல்ல மணமகன் கைத்தறி வேட்டிதான் அணிவான். பிணமகனுக்குத்தான் மில்துணி போர்த்துவாங்க. நீங்க மணமகனா, பிணமகனா?’ எனக் கேட்டதும், கூட்டத்தில் மில்துணி அணிந்திருந்தவர்கள் அதைக் கழற்றி எறிந்தார்களாம். ஜீவா, திரு.வி.க. மாதிரி முக்கியமான தலைவர்கள் அப்பாவின் பேச்சுக்கு ரசிகர்களா இருந்திருக்காங்க.

அப்பாவின் நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபம் கட்டின எம்.ஜி.ஆர்., அங்கே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அப்பா பேரை வெச்சார். அதே போல கலைஞர், அப்பா எழுதின புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கார்.” பெருமிதப் புன்னகையுடன் பேசுகிறார் பாத்திமா.

பாவலரின் செய்யுள்களைப் பாடப் புத்த கங்களில் இடம்பெறச் செய்யவேண்டும், விக்டோரியா ஹாலுக்கு பாவலர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் குடும்பத்து உறுப்பினர்கள், www.pavalar.blog.comஎன்ற வலைப்பூ மூலம் அவர் பற்றிய தகவல் களைத் தொகுத்து வருகிறார்கள்!

தகவல் : சலீம் இப்ராஹீம்

————————————————————

“ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதன் – சீரிய
செந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!”

எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார்.

“வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!” என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர், நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும் ஊரில் பக்கீர் மீறான் ஆமீனா தம்பதியர்க்கு மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல் பிறந்தார்.

“தொட்டனைத்தூறும் மணற்கேணி,” என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில் தமிழுணர்வு ஊற்றெடுத்தது. சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்ற பாவலர், இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் இராமலிங்க அடிகளாரின் அருட்பாவை ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர். இதனை அறிந்த பாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார். அதற்கான கூட்டம் சென்னையில் ஏற்பாடாயிற்று. அக்கூட்டத்தில் தொடக்கமாக,

“சாதிகுலம் சமயமெல்லாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு வமுதளித்த தணித் தலைமைப் பொருளே,
ஆதிநடு கடைகாட்டா அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம் மற்றனைத்து நின்ற மொழியே,
ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம் உருவுறச் செய்யுறவே,
ஜோதிமயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே!”

இப்பாடலை முழங்கினார். கேட்ட அவையோர் இவருடைய சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து கையொலி எழுப்பி மகிழ்ந்தனர். தொடர்ந்து பல அரங்குகளில் தமது வாதத் திறமையால் “அருட்பா அருட்பாவே” என்று நிறுவினார்.

மரபுப் பாவளம் மிக்க பாவலர் சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார். தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை, அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி வேண்டினார். அப்பொழுது,

“சிரமாறுடையான் செழுமா வடியைத்,
திரமா நினைவார் சிரமே பணிவார்,
பரமா தரவா பருகாருருகார்,
வரமா தவமே மலிவார் பொலிவார்.” என்னும் பாடலைப்பாடி,

சிரம் ஆறுடையான் – சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,
சிரம்மாறு உடையான் – இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி,
சிரம் ஆறுடையான் – ஆறுதலைகளை உடைய முருகன்,
சிரம் “ஆறு” உடையான் – திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட பள்ளிகொண்ட திருமால்,
சிரம் ஆறு உடையான் – தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ்

என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார். இக்கவிச் சுவையில் “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ,” என்ற திருவாசகத் தேனையும், “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற திருமந்திரச் சத்தையும் பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ!

அவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது. ஒருமுறை மதுரைச் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர், தமிழ் விருந்துண்டு மகிழ கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர்,
இலக்கணப் பேராசிரியர் நாராயண ஐயங்கார்,
கந்தசாமிக் கவிராயர்
ஆகியோர் தமிழமுது பரிமாறிக் கொண்டிருந்தனர். அங்குப் பாவலரும் வருகை தந்து அமர்ந்தார்.

பாவலரின் நினைவுக் கலையின் பரிசோதனைக் களமாக அந்த அவை மாறியது. ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர் ஏதேனும் புராண நூலில் ஏழுமுறை “நோக்க” என்ற சொல் வந்துள்ள பாடல் ஒன்றைக் கூறுங்கள் எனக் கேட்க, பாவலர்,

“கரத்தை நோக்குவர், வாளினை நோக்குவர்,
கடுப்பின் கருத்தை நோக்குவர், வீரத்தை நோக்குவர்,
எதிராத் தரத்தை நோக்குவர், அவையினில் அபுஜகில் – உடனே
உரைத்த வார்த்தையை நோக்குவர், நோக்குவர் உள்ளத்தை.”

என்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு அவர் தந்த இலக்கியச் செல்வங்கள் மரபுப் பாவளம் மலிந்தவை. “முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்,” என்பதற்கு எடுத்துக்காட்டானவை.

நபிகள் நாயக மான்மிய மஞ்சரி,
கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி,
திருநாகூர் திரிபந்தாதி,
நீதிவெண்பா,
சம்சுதாசீன் கோவை, மற்றும்
தனிப்பாடல் திரட்டு
முதலியவை அவர் தந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.

பாவலர் சொல்லிலும் செயலிலும் நீதிவழுவா விழுமிய நோக்கம் கொண்டவர். அறிஞர் அவையிலும், மாணவர் மத்தியிலும் நீதிகளை உணர்த்தி வந்தார். அந்த நீதிகளே அவரிடம் வெண்பாக்களாக மலர்ந்தன.
அறியாமையை அகற்றுவது கல்வி;
அறிவை நன்நெறிக்குத் திருத்துவது கல்வி;
இறையருளைப் பெருக்கி ஆன்மிக இன்பத்தை அளிப்பது கல்வி,
அதனை,

“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை யகற்றி மதிக்கும் தெருளை
அகற்றுவதும் ஆவிக்கருந்துணை யாயின்பம்,
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.”என்பதும்,

திருவள்ளுவர் கூறிய
கூடாஒழுக்கம்,
கூடாநட்பு,
சிற்றினம் சேராமை
என்ற சீரிய நன்நெறியை,

“கூடாரைக் கூடற்க, கூடிற் குறித்தவலாம்,
நாடாதெரிந் தேனும் நட்பொழிக -ஆடுமயில்
பச்சோந்தி பாற்படா பட்டால் மணிவிழிகள்
அச்சோ அழிந்தொழியு மால்.”

என்பதும் அவர் நீதிவெண்பாவில் குறிப்பிடத்தக்கன. அவர் எழுதிய “சீட்டுக் கவிகள்” இலக்கியத்தரம் வாய்ந்தவை. பாவலர் சென்னையில் தங்கி இருந்தபொழுது, கோட்டாற்றிலிருந்து தம் நண்பர் பாக்கியம் பண்டாரம் என்பவருக்கு விடுத்த சீட்டுக் கவியில்,

“ஆகஞ் சுகமா? அடுத்தவர்கள் சேமமா?
மேகம் வழங்கியதா? மேலுமிந்தப்-போகம்
விளையுமா? இன்னுமழை வேண்டுமா? செல்வம் விளையுமா? ஊர்செழிக்கு மா?”

என்று பாவலர் தமது பொதுநல விழைவை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் தம்போல் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள பாவலர், தம் முன்னாள் மாணவர் ஒருவருக்கு எழுதிய சீட்டுக்கவி இது:

“கற்றுவரும் பெரும்தொழிலைக் கனவிடையும்
மறவாமல் கருத்தும் கொண்டு
முற்றுறவே ஆய்ந்துணர்ந்து முடித்த வந்நூல்
ஏது, இனிநீ முடிக்கப் போகும்
கொற்றமுறு நூலேது? மேல்விளங்கு
நூலென்ன? குணம தாக
வெற்றிதரும் இலக்கணங்கள் ஏதேனும்
பயின்றனையோ விள்ளு வாயே!”

இது அனைவரிடமும் படிப்பார்வத்தைத் தூண்டத்தக்கதாகும். பாட்டுகள்.

பலவற்றுள் முத்திரை பதித்த பாவலர் உரைநடைகள் பலவும் தந்துள்ளார்.

நபிகள் நாயக ஜீவிய சரித்திரம்,
சீறா நாடகம்,
தேவலோகத்துக் கிரிமினல் கேசு,
வேதாந்த விகார கிரிமினல் கேசு என்பன இவருடைய உரைநடை நூல்களாகும்.

தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவராகிய செய்குத்தம்பிப் பாவலர் 1950 பிப்ரவரி 13ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இவர் மறைவுச் செய்தி அறிந்து பண்டிதமணி கதிரேசச் செட்டியார் “நாஞ்சில் நாட்டின் பெரும்புலவரும், தமிழன்னையின் திருப்புதல்வரும் மறைந்தது கேட்டு துயருறுகிறேன்,” என்றார். இரசிகமணி டி.கே.சி. “பாவலருக்கு இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும் இந்தத் தலைமுறையில் யாருக்கும் இருந்ததில்லை,” என்றார்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)

தகவல் : நா. கண்ணன் நடராஜன்

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 17:17:43 | Permalink | Comments Off

Wednesday, October 7, 2009

PAVALAR REMEMBERED

S.T. Hindu College, Nagercoil
Volume No: 2 Issue No: 3

General News

Pavalar Remembered

By M.R.Maya, II M.A.
Published on 03 rd Nov, 2009

Bookmark and Share

Symposium on Seikuthambi Pavalar

A Symposium on Seikuthambi Pavalar was held on Monday, the 24th August, 2009 at the Seminar Hall,
S.T.Hindu College, Nagercoil. It was organised by the Research Centre, Tamil Studies, Department of
Tamil, S.T.Hindu College and the Sahitya Akedemy, New Delhi.

The Inaugural function commenced at 10.30 a.m. with Er.P. Aurumugam Pillai, Secretary, S.T.Hindu
College, Nagercoil on the Chair. Dr.R. Mohan, Head, Dept. of Comparative Literature, Madurai
Kamaraj University, Madurai and Member,Advisory Board, Tamil, Southern Region, Sahitya
Akademy delivered the Presidential Address. Thiru A.S. Elankovan, Secretary, Southern Region,
Sahitya Akademy welcomed the gathering and elaborated on the theme of the symposium. The
Inaugural Address was given by the former Advisory Board Member of the Sahitya Akademy
and the novelist, Thoppil Mohammed Meeran. Dr.A. Meenakshi Sundara Rajan, Principal, S.T.Hindu
College, Nagercoil offered his felicitation and the session came to an end with the Vote of Thanks
offered by Dr.S.Sreekumar, Head, Research Centre, Department of Tamil, S.T.Hindu
College, Nagercoil.

The academic session started after the tea break. The First Session was chaired by the Sahitya
Akademy Award winner and Novelist, Ponneelan. The theme for the session was “Pavalar and
Communal Harmony.” Dr.S.Sreekumar, Head, Dept. of Tamil, S.T.Hindu College, Nagercoil and
Dr.Syed Uthumon, Principal, Sadakathullah Appa College, Palayamkottai presented papers on
the theme.

The Second Session was chaired by Prof. Dr. K.Mohamed Farook. The theme for the session was
“The Poetic Craft of Pavalar.” Dr.Padmanabhan, General Secretary, Kanyakumari District Research
Centre for History and Culture, Dr.James R. Daniel,Former Principal, Scott Christian College,
Nagercoil, Novelist Subrabharathi and Dr. Sinthihayal, Principal, Women’s Christian
College, Nagercoil presented their papers on the topic.

The Valedictory function was held at 4.30 p.m. Dr.A.Meenakshi Sundara Rajan, Principal,
S.T.Hindu College, Nagercoil presided over the function. Thiru A.S. Elankovan, Secretary,
Southern Region, Sahitya Akademy delivered the Valedictory Address. Earlier, Dr.S.Sreekumar,
Head, Research Centre, Tamil Studies, Dept. of Tamil, S.T.Hindu College, Nagercoil
welcomed the gatherings. Vote of Thanks was given by Thiru N.Bhaskaran, Officer-in-charge,
Southern Region, Sahitya Akademy, Chennai.

The beneficiaries of the Symposium (numbering more than 250) were the students, research scholars,
and faculties of various departments of S.T.Hindu College, Nagercoil.

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 19:17:29 | Permalink | Comments Off

Sunday, July 12, 2009

SATURDAY, MAY 16, 2009

பாவலர் 100

பாவலர் 100

கம்பீரமாக நிற்கிறார் அந்த மனிதர். சுற்றிலும் நூற்றுக் கணக்கான தமிழறிஞர்கள். அவரை நோக்கி கேள்விக் கணை கள் நீள்கின்றன. வந்து விழுகின்ற கேள்விகளுக்கு எல்லாம் சுளீர் பதில்கள் தெறிக்கின்றன அவரிடமிருந்து. தன்னிடம் கேள்வி கேட்ட 100 பேருக்கும் ஒரே மூச்சில் வரிசையாகப் பதில் சொல்லி அசத்த… கூடி நின்ற அறிஞர்கள் கூட்டம் ஆச்சர் யத்தில் திக்குமுக்காடுகிறது. சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார். 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாள் சொன்னால், அடுத்த நொடி கிழமையைச் சரியாகச் சொல்வார். அவர்தான் செய்குத் தம்பிப் பாவலர். அதிசயிக்கவைக்கும் சாதனைத் தமிழர். அவருக்குத் தபால் தலை வெளியிட்டுக் கௌரவித்திருக்கிறது மத்திய அரசு!

அடுத்தடுத்து பெரிய எண்களை வரிசையாகச் சொன்னால், அவற்றின் கூட்டுத் தொகை, பெருக்குத் தொ¬ககளை உடனே சொல்வது, நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது கொடுக்கப்படும் நீரை ருசி பார்த்துவிட்டு, இறுதியில் அது எந்தப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று சரியாகச் சொல்வது, நிகழ்ச்சியின் இடையில் தன் மீது வீசப்பட்ட நெல்மணிகள், பட்டாணிகள், கற்கள் எத்தனை என கணக்குச் சொல்வது என இவர் ஆச்சர்யங்களால் நிறைந்தவர். இப்படி எட்டு விஷயங்களை நினைவில் வைத்துச் சொல்வதற்கு அஷ்டாவதானி என்று பெயர். பத்து என்றால் தசாவதானி. இவர் இப்படி 100 விஷயங்களை நினைவில் வைத்து, ஒரே மூச்சில் திரும்பச் சொல்லக் கூடியவர் என்பதால் ‘சதாவதானி’.

செய்குத் தம்பிப் பாவலர் இந்தச் சாதனையை நிகழ்த்தி 100 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதைப் போற்றும் விதமாக தமிழக அரசு இவர் எழுதிய நூல்களை நாட்டுடமை ஆக்கி உள்ளது. மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்திருக்கிறது. சென்னையில் வசிக்கும் பாவலரின் மகள் பாத்திமா பீவியைச் சந்தித்தேன்.

”கன்னியாகுமரி மாவட்டம் கோட் டார் பக்கத்தில் உள்ள இடலாக்குடிதான் அப்பாவுக்குச் சொந்த ஊர். மலையாள வழியில் பள்ளிப் படிப்பைப் படிச்சாலும், அவருக்குத் தமிழ் மேலதான் காதல். வீட்டு வறுமைக்கு இடையில் திண்ணைப் பள்ளிக்கூடத்துல தமிழ் கத்துக்கிட் டார். 15 வயதிலேயே செய்யுள் எழுதும் அள வுக்கு தமிழில் புலமை. பிறகு மாதம் 60 ரூபாய் சம்பளத்துக்குப் பிழை திருத்தும் வேலை பார்த்துக் கிட்டே சீறாப் புராணத்துக்கு உரை எழுதினார். ‘யதார்த்தவாதி’, ‘இஸ்லாமிய மித்ரன்’னு ரெண்டு பத்திரிகைகளையும் நடத்தியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்துதான் தசாவதானம், சதாவதானம்னு பல சாதனைகளைச் செய்தார். சென்னை விக்டோரியா ஹாலில் தசாவதானம் செய்தபோது ‘தசாவதானி’ பட்டம் கொடுத்தாங்க. திரு கோட்டாற்று பதிற்றுப் பத்தந்தாதி, கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், அழகப்பக்கோவை, நாகைக் கோவை என ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார். விடுதலைப் போராட்டத்திலும் கலந்துக்கிட்டிருக்கார்.

அந்நிய நாட்டுத் துணிகள் எரிப்புப் போராட்டத்தில் அப்பா பேசும்போது, ‘ஒரு நல்ல மணமகன் கைத்தறி வேட்டிதான் அணிவான். பிணமகனுக்குத்தான் மில்துணி போர்த்துவாங்க. நீங்க மணமகனா, பிணமகனா?’ எனக் கேட்டதும், கூட்டத்தில் மில்துணி அணிந்திருந்தவர்கள் அதைக் கழற்றி எறிந்தார்களாம். ஜீவா, திரு.வி.க. மாதிரி முக்கியமான தலைவர்கள் அப்பாவின் பேச்சுக்கு ரசிகர்களா இருந்திருக்காங்க.

அப்பாவின் நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபம் கட்டின எம்.ஜி.ஆர்., அங்கே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கும் அப்பா பேரை வெச்சார். அதே போல கலைஞர், அப்பா எழுதின புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கியிருக்கார்.” பெருமிதப் புன்னகையுடன் பேசுகிறார் பாத்திமா.

பாவலரின் செய்யுள்களைப் பாடப் புத்த கங்களில் இடம்பெறச் செய்யவேண்டும், விக்டோரியா ஹாலுக்கு பாவலர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் குடும்பத்து உறுப்பினர்கள், www.pavalar.blog.com என்ற வலைப்பூ மூலம் அவர் பற்றிய தகவல் களைத் தொகுத்து வருகிறார்கள்!

Saleem.

0 comments:

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 17:11:41 | Permalink | Comments Off

Tuesday, May 5, 2009

SADAVATHANI SHAIK THAMBI PAVALAR ( STAMP )

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 19:12:02 | Permalink | Comments Off

Monday, May 4, 2009

PAVALAR STAMP

Sheik Thambi Pavlar FDC from India

FDC Name:  Sheik Thambi Pavlar.

Issue Date:  31st DEC’2008

Details
:   Sheik Thambi Pavalar was born on 31st JUL’1874. He was having good knowledge of tamil grammar and literature.

He wrote many books and more important among them are “Thirukkottaru”, Pathirthupathu Anthathi.He was an authority on “Kamba Ramayanam”.

He was also an orator who could hold the audience spellbound.

He is popularly known as “Sadavadani”. which means one who has a grasp on many different aspects of knowledge at a moment.
 
On 10th March 1907 he performed Sathavathana Programme in the presence of Tamil Scholars and got appreciation.

 He took part in the Independence struggle of India. He died on 13th FEB’1950.

  • Denomination 500p
  • 0.4 Million stamps Printed
  • Stamps printed in India Security Press,Nasik
  • FDC & Cancellation design by Alka Sharma
Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 21:05:45 | Permalink | Comments Off

Sunday, May 3, 2009

செய்குத்தம்பி பாவலர்

செய்குத்தம்பி பாவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (ஜூலை 31, 1874- பெப்ரவரி
 13
, 1950) தமிழ்எழுத்தாளராவார்.

தமிழ் இலக்கணஇலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற
செய்குத்தம்பி பாவலர் அவர்கள்
1907-ஆம் ஆண்டு மார்ச்
10
ஆம் தேதி சென்னையில்தமிழ் அறிஞர்கள் முன்னிலையில்
 சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர்
.

சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் நபிகள்நாயக
 மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி,
 திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப்
 பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
 நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை
 நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த
 விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை
 காவியங்களையும் எழுதியவர்.

பாவலர் அவர்கள் சீரிய தமிழறிஞர் மட்டுமின்றி
அயல்நாட்டுத் துணிகள் புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு
போன்ற இயக்கங்களில் தீவிர பங்கேற்று நாட்டிட்ன
 விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தவர்.

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 15:15:09 | Permalink | Comments Off

“சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

ஜூலை 31 – “சதாவதானிசெய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

Kannan Natarajan  
Wyświetl profil   Translate to polskiTranslated (View Original)

 Więcej opcji 30 Lip 2008, 22:37

lna: Śr. 30 Lip 2008 22:37


Temat: ஜூலை 31 – “சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

“ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்
 பாரில் புகழ்படைத்த பண்டிதன் – சீரிய
 செந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!”

எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப்
பாடினார்.

*”வாழையடி வாழையென வந்த
 திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!”*

 என்ற
இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க
 
குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த
ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர்,

நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும்
ஊரில் பக்கீர்மீறான் ஆமீனா தம்பதியர்க்கு
 மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல்
பிறந்தார்.

“தொட்டனைத்தூறும் மணற்கேணி,”
என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில்
தமிழுணர்வு
ஊற்றெடுத்தது.

சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம்
 முறையாகத் தமிழ் பயின்ற
பாவலர்,
 இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.

அந்நாளில் இராமலிங்க
அடிகளாரின் அருட்பாவை
 ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர்.

இதனை அறிந்த
பாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார்.

அதற்கான கூட்டம்
சென்னையில் ஏற்பாடாயிற்று.
 
அக்கூட்டத்தில் தொடக்கமாக,

“சாதிகுலம் சமயமெல்லாம்
 தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு
வமுதளித்த தணித்
தலைமைப் பொருளே,
 ஆதிநடு கடைகாட்டா
அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம்
 மற்றனைத்து நின்ற
மொழியே,
 ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க
 எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம்
உருவுறச்
செய்யுறவே,
 ஜோதிமயமாய் விளங்கித்
 தனிப்பொதுவில் நடிக்கும்
 தூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே!”

இப்பாடலை முழங்கினார்.

கேட்ட அவையோர் இவருடைய
சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து
கையொலி எழுப்பி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து பல அரங்குகளில்
தமது வாதத் திறமையால்
*”அருட்பா அருட்பாவே”* என்று நிறுவினார்.

 த.மு.சா. காஜா முகைதீன்

மரபுப் பாவளம் மிக்க பாவலர்
 சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார்.

தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை,
அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி
வேண்டினார்.
 
அப்பொழுது,

சிரமாறுடையான் செழுமா வடியைத்,
 திரமா நினைவார் சிரமே பணிவார்,
 பரமா தரவா பருகாருருகார்,
 வரமா தவமே மலிவார் பொலிவார்
.”

என்னும் பாடலைப்பாடி,

  -சிரம் ஆறுடையான் -
 சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான், 

   - சிரம்மாறு உடையான் -
 இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி, 

   - சிரம் ஆறுடையான் -
 ஆறுதலைகளை உடைய முருகன், 

   - சிரம் “ஆறு” உடையான் -
 திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட
   பள்ளிகொண்ட திருமால்
,
   - சிரம் ஆறு உடையான் -
தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ்

என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார்.
 

இக்கவிச் சுவையில்

*”ஒரு நாமம் ஓர்
உருவம் ஒன்றும் இல்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ,”*என்ற

*திருவாசகத் தேனையும்*,

* “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”*

என்ற *திருமந்திரச்
சத்தையும்*

பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ!


அவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது.

 
ஒருமுறை மதுரைச்
தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர்,
 தமிழ் விருந்துண்டு மகிழ
கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

   - சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர்,
   - இலக்கணப் பேராசிரியர் நாராயண ஐயங்கார்,
   - கந்தசாமிக் கவிராயர்

ஆகியோர் தமிழமுது பரிமாறிக் கொண்டிருந்தனர்.
 
அங்குப் பாவலரும் வருகை தந்து
அமர்ந்தார்.

பாவலரின் நினைவுக் கலையின்
 பரிசோதனைக் களமாக அந்த அவை மாறியது.

ஆய்வாளர்
சுப்பிரமணிய ஐயர் ஏதேனும்
 புராண நூலில் ஏழுமுறை “நோக்க” என்ற சொல் வந்துள்ள
பாடல் ஒன்றைக் கூறுங்கள் எனக் கேட்க,

 பாவலர்,
 
கரத்தை நோக்குவர், வாளினை நோக்குவர்,
 கடுப்பின் கருத்தை நோக்குவர், வீரத்தை நோக்குவர்,
 எதிராத் தரத்தை நோக்குவர்,
 அவையினில் அபுஜகில் – உடனே
 உரைத்த வார்த்தையை நோக்குவர், நோக்குவர் உள்ளத்தை.”

என்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு
அவர் தந்த இலக்கியச் செல்வங்கள் மரபுப் பாவளம்
மலிந்தவை.
 

*”முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல்
போற்றுவம்,”* என்பதற்கு எடுத்துக்காட்டானவை.

   - நபிகள்நாயக மான்மிய மஞ்சரி,
   - கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
   - திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி,
   - திருநாகூர் திரிபந்தாதி,
   - நீதிவெண்பா,
   - சம்சுதாசீன் கோவை, மற்றும்
   - தனிப்பாடல் திரட்டு

முதலியவை அவர் தந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.

பாவலர் சொல்லிலும் செயலிலும் நீதிவழுவா விழுமிய நோக்கம் கொண்டவர்.
 
அறிஞர்
அவையிலும், மாணவர் மத்தியிலும் நீதிகளை உணர்த்தி வந்தார்.
 
அந்த நீதிகளே அவரிடம்
வெண்பாக்களாக மலர்ந்தன.

   - அறியாமையை அகற்றுவது கல்வி;
   - அறிவை நன்நெறிக்குத் திருத்துவது கல்வி;
   - இறையருளைப் பெருக்கி
 ஆன்மிக இன்பத்தை அளிப்பது கல்வி,

அதனை,
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
 மருளை யகற்றி மதிக்கும் தெருளை
 அகற்றுவதும் ஆவிக்கருந்துணை யாயின்பம்,
 பொருத்துவதும் கல்வியென்றே போற்று
.”

என்பதும்,

திருவள்ளுவர் கூறிய

   - கூடாஒழுக்கம்,
   - கூடாநட்பு,
   - சிற்றினம் சேராமை

என்ற சீரிய நன்நெறியை,

“கூடாரைக் கூடற்க, கூடிற் குறித்தவலாம்,
 நாடாதெரிந் தேனும் நட்பொழிக -ஆடுமயில்
 பச்சோந்தி பாற்படா பட்டால் மணிவிழிகள்
 அச்சோ அழிந்தொழியு மால்.”

என்பதும் அவர் நீதிவெண்பாவில் குறிப்பிடத்தக்கன.
 
அவர் எழுதிய “சீட்டுக் கவிகள்”
இலக்கியத்தரம் வாய்ந்தவை.
 

பாவலர் சென்னையில் தங்கி இருந்தபொழுது,
கோட்டாற்றிலிருந்து தம் நண்பர்
 பாக்கியம் பண்டாரம் என்பவருக்கு விடுத்த
சீட்டுக் கவியில்,

“ஆகஞ் சுகமா?
 அடுத்தவர்கள் சேமமா?
 மேகம் வழங்கியதா?
 மேலுமிந்தப்-போகம்
 விளையுமா? இன்னுமழை வேண்டுமா?
 செல்வம் விளையுமா? ஊர்செழிக்கு மா?”

என்று பாவலர் தமது பொதுநல விழைவை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் தம்போல் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்
ஆர்வமுள்ள பாவலர்,
 தம் முன்னாள் மாணவர் ஒருவருக்கு எழுதிய சீட்டுக்கவி இது:

“கற்றுவரும் பெரும்தொழிலைக் கனவிடையும்
 மறவாமல் கருத்தும் கொண்டு
 முற்றுறவே ஆய்ந்துணர்ந்து முடித்த வந்நூல்
 ஏது, இனிநீ முடிக்கப் போகும்
 கொற்றமுறு நூலேது? மேல்விளங்கு
 நூலென்ன? குணம தாக
 வெற்றிதரும் இலக்கணங்கள் ஏதேனும்
 பயின்றனையோ விள்ளு வாயே!”

இது அனைவரிடமும் படிப்பார்வத்தைத் தூண்டத்தக்கதாகும்
. பாட்டுகள்.

பலவற்றுள் முத்திரை பதித்த பாவலர் உரைநடைகள் பலவும் தந்துள்ளார்.

   - நபிகள் நாயக ஜீவிய சரித்திரம்,
   - சீறா நாடகம்,
   - தேவலோகத்துக் கிரிமினல் கேசு,
   - வேதாந்த விகார கிரிமினல் கேசு என்பன இவருடைய உரைநடை நூல்களாகும்.

தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவராகிய செய்குத்தம்பிப் பாவலர் 1950
பிப்ரவரி 13ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
 
இவர் மறைவுச் செய்தி அறிந்து
பண்டிதமணி கதிரேசச் செட்டியார்
 
“நாஞ்சில் நாட்டின் பெரும்புலவரும்,
தமிழன்னையின் திருப்புதல்வரும் மறைந்தது கேட்டு துயருறுகிறேன்,”

என்றார்.

இரசிகமணி டி.கே.சி. “பாவலருக்கு இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும்
இந்தத் தலைமுறையில் யாருக்கும் இருந்ததில்லை,” என்றார்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 10:47:37 | Permalink | Comments Off

Saturday, May 2, 2009

SAMAYAM KADANTHA SATHAVATHANI

சமயம் கடந்த சதாவதானி   Read (1661 times)
on 10/31/2006 7:50:16 AM by SpaceTeam

காலங்கள் தோறும் சமயங்களை வளர்த்தது தமிழ்.

  சமயங்கள் தமிழை வளர்த்தன.  சமண, பௌத்த நூல்களும், சைவ வைணவ நூல்களும், கிறிஸ்தவ, இஸ்லாமிய நூல்களும் இவ்வாறு உருவானவையே. 

அந்தந்த சமயப் புலவர்களும், ஞானியரும் அழியாத காப்பியங்களை அளித்துச் சென்றுள்ளனர்.

 அந்த வரிசையில் வைத்து மதிக்கத் தக்கவரே மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர்.

“இந்தத் தலைமுறையில் மகாமதி பாவலருக்கு தமிழ்த்துறையில் இருந்த நுண்ணிய அறிவும்,
அபூர்வப் புலமையும் வேறு யாருக்கும் இருந்ததில்லை.

 அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் தமிழ் மொழியின் வரலாற்றுச் சரிதம் இன்றுவரை ஈன்றெடுத்து வளர்த்துக் கொண்டிருந்த முதுபெரும் புலவர் பெருமரபு இறந்துவிட்டது என்றுதான் அர்த்தம்” – இது ரசிகமணி டி.கே.சி.யின் மதிப்பீடு.

ஞானியார் அப்பா நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் ‘ இடலாக்குடி ‘ யில் வாழ்ந்து தமிழால் இஸ்லாமிய சமயத்தை வளர்த்தவர். 

அவர் மரபில் வந்த அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31இல் பிறந்தவரே செய்குதம்பி.

அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன.

  பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பிஇம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது. 

எனினும் இவர் சிந்தனை தமிழ்மேலேயே இருந்தது.

 அக்காலத்தில் இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார்.

  இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார்.  காளமேகப் புலவர்,
 மாம்பழக் கவிச்சிங்க நாவலர் போல
அந்தாதியாகவும் சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார்.

 அவரது தமிழ்ப்புலமை,கண்டு ஆசிரியரே வியந்து போனார்.

ஞானியார் அப்பாவின் ‘ மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு ‘ என்னும் நூலை அச்சிட  சென்னை ‘இட்டா பார்த்தசாரதி நாயுடுவுக்கு ‘ தமிழறிந்த  இஸ்லாமியர் தேவைப்பட்டார்.

  சென்னை சென்று அந்நூலைச் சிறப்புடன் பதிப்பித்த செய்குதம்பிக்கு அப்போது வயது 21,

 அவரது அறிவாற்றலைக் கண்டு ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்திலேயே பிழை திருத்தும்  புலவராக அவரை அமர்த்திக் கொண்டனர்.  மாதம் ரூ60/-ஊதியமும் பிற வசதிகளும் செய்து கொடுத்தனர்.  அவர் வறுமையை மறந்து வாழத் தொடங்கிய காலம்

 இதுவே.
இக் காலத்தில்தான் சிந்தையள்ளும் சிறந்த காப்பியமாகிய சீறாப்புராணத்துக்கு சீரிய உரையெழுதிப்பதிப்பித்தார்.

 வேதாந்த விவகாரக் கிரிமினல் கேசு,  தேவலோகத்துக் கிரிமினல் கேசு என்னும் நூல்களும்எழுதிப் பதிப்பித்தார்.

  இதனால் இவர் புகழ் நாடெங்கும் பரவியது.  உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும், நிகழ்த்தினார்
.
  அஞ்சாமை கேட்பவரைக் கவரும் சொல்வன்மை, சமயச் சார்பற்ற நடுநிலைமை .

இட்டா பார்த்தசாரதி தலைமையில் நடந்த ஒருவிழாவில் அவருக்குப் ‘ பாவலர் ‘ என்னும் பட்டம்அளித்துப் பாராட்டினார்.

  அன்று முதல் செய்குதம்பி பாவலர் என்றே அழைக்கப்பெற்றார்.  அப்போது அவருக்கு வயது 27.

அக்காலத்தில் இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை ‘திருஅருட்பா’ என்று கூறுவது சமயக்குரவர்களை அவமதிப்பதாகும் என்று யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் கடுமையாக எதிர்த்து வந்தார்

.  கடலூர் மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.  தீர்ப்பு நாவலருக்கு எதிராக முடிந்தது.  எனினும்’அருட்பா?மருட்பா?’ விவாதம் தொடர்ந்தது.

இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே ஆறுமுக நாவலரும், வள்ளலாரும் மறைந்தனர்

.எனினும் ஆறுமுக நாவலரின் மாணவர் கதிர்வேல் பிள்ளை தொடர்ந்து அருட்பாவை எதிர்த்து வந்தார்.

 அவர் கூற்றில் நியாயம் இல்லை என்பதையறிந்த பாவலர், கதிர்வேலுக்கு எதிர்வேலாகக் களத்தில் குதித்தார். தம் வாதத் திறமையால் அருட்பா அணியை வெற்றிக்குக் கொண்டு வந்தார்.

ஓர் இஸ்லாமியப் புலவர் சைவ சமய வாதிகளுக்கிடையே நுழைந்து, அவர்களது குதர்க்க  வாதங்களைத்தம் தருக்கவாதத் திறமையால் தகர்த்துத் தவிடு பொடியாக்கியதைப் பாராட்டி காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

 அவரது இனிய சொற்பொழிவைப்  பாராட்டி ‘ தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் ‘ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

  பாவலரை யானை மேல் அமர்த்தி நகர்வலம் செய்வித்தனர்.  காஞ்சி ஆலயத்தார் ஓர் இஸ்லாமியப் புலவருக்கு பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.

 இந்நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு பாவலரையே குருவாக ஏற்றுக்கொண்டார் திரு.வி.க. பாவலர் என் குருத்தானத்தில் இருக்கிறார்

.  இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை என் குரு கதிரைவேற்பிள்ளை ‘மருட்பா’ என்ற பொழுது, அவருக்கு எதிராகப் பாவலர் ‘ அவை அருட்பாதாம் ‘ என்று சொற்பொழிவாற்றினார்.

அவருடைய சொற்பெருக்கை நான் குறிப்பெழுதிக்கொண்டு போய் என் குருவிடம் காட்டுவேன் இப்பொழுதுஎன் குரு இறந்து விட்டதால் தமிழ் மரபுப்படி அவருடைய எதிரியாகிய பாவலர் தாம் என் குருவாகின்றார்.என்று தம்  நாட்குறிப்பில் எழுதினார்.

பாவலர் அவதானக் கலையிலும் சிறந்து விளங்கினார்.

 1907 மார்ச் 10-சென்னை விக்டோ ரியா மண்டபத்தில் சதாவதானத்தை அரங்கேற்றினார்.

 வித்துவான் கண்ணபிரான் முதலியார் தலைமைதாங்கினார்.

  காஞ்சி மகாவித்துவான் இராமசாமி நாயுடு, தஞ்சாவூர் சதாவதானி சுப்பிரமணிய ஐயர், பச்சையப்பன்கல்லூரித் தமிழ்த் துறை தலைவர் திருவேங்கடசாமி நாயுடு, புலவர் கா.நமச்சி வாய முதலியார் திரு.வி.க. , டி.கே.சி., முதலிய தமிழறிஞர்களும், இந்து சுதேசமித்திரன் ஆசிரியரான ஜி.சுப்பிரமணியஐயரும்,திரளான மக்களும் பார்வையாளர்களாக இருந்தனர்.

இந்த அவதானம் வெற்றி முழக்கோடு முடிந்ததை முன்னிட்டு பாமாலைகளும், பூமாலைகளும்,பொன்னாடைகளும் சாற்றப்பட்டன.

  நிகழ்ச்சிக்குக் காரணமாக இருந்த இட்டாபார்த்தசாரதி தங்கத் தோடாக்கள் இட்டுப் பாராட்டினார்.

 சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் ‘ மகாமதி ‘ பட்டம்வழங்கினார்.  தலைவர் ‘ சதாவதானி ‘ பட்டம் வழங்க, ‘ மகாமதி சதாவதானி ‘

 செய்குதம்பிப் பாவலர்வாழ்க’ என அரங்கமே மகிழ்ச்சி ஆராவாரம் செய்தது.

பாவலர் வெறும் வாய்ச்சொல் வீரர் அல்லர்.  அன்றைய, ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார்.

  1920நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார்.

 அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையிலேயேநடந்தன.

“1937ஆம் ஆண்டில் என நினைக்கிறேன் , பாவலர் நாகர்கோயில் நகராண்மைக் கழகத் திடலில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார்.

  நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் பெருமையை விளக்கினார்.

  அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்”என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர்வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.

பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர்.நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும்இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்டிருந்தார்.  அவரது விடுதலைப் போராட்டத்தின்காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர்.  இதைக் கேட்ட பாவலர் நகைத்தார்

.  நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த இவருக்கு இது ஒரு பொருட்டோ ?

பாவலர் இறுதியாக உரையாற்றிய இடம் தஞ்சாவூர்.

 அப்போது அங்கு சொன்னார்; தாம் தஞ்சாவூருக்கு வந்திருப்பது, தம் சாவூருக்கு வந்திருப்பதாக சிலேடையாகக் கூறினார். அதன் பிறகுஅவர் நீண்ட நாள் வாழவில்லை.

1950 பிப்ரவரி 13-ல் அவர் காலமானார்.  அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்கு கவிமணி தலைமை
தாங்கினார்

“ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனை-சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பி
பாவலனை
எந்நாள் காண்போம் இனி”

என்று வருந்திப் பாடினார்.

பாவலரின் அரிய தொண்டினை அரசும், மக்களும் மறக்க இயலாது.

 பாவலர் மற்றும் கவிமணி விழாக்களை அரசு ஆண்டுதோறும் நடத்துகிறது

.  பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு ‘பாவலர் தெரு’என்றே அழைக்கப்படுகிறது.  இடலாக்குடி அரசுமேல்நிலைப் பள்ளிக்கு ‘ சதாவதானி பாவலர் அரசுமேல்நிலைப்பள்ளி’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

 அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.

 இது தமிழ்ச் சங்கமாய்த் திகழ்ந்து அவரைப் போலவே தமிழ் வளர்க்க வேண்டும் என்பது அறிஞர்களின் விருப்பம்.

மத நல்லிணக்கத்தைப் பற்றி அரசியல்வாதிகள்பேசுவதை விட ஆன்மிகவாதிகளும், அறிஞர்களூம் பேசுவதே உண்மையான பயனை உலகுக்கு நல்கும்.

 பாவலர் வாழ்க்கையே அதற்கோர் எடுத்துக்காட்டு,இருட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பதை விட ஒரு சிறு விளக்கேனும் ஏற்றுவது மேலானதல்லவா!

(இன்று செய்கு தம்பி பாவலரின் 125_வது பிறந்தநாள்)
(கட்டுரையாளர், தமிழ்நாடு தனியார் பள்ளிஆசிரியர் சங்கஇதழாசிரியர்)
தினமணி நாள்:சனிக்கிழமை/31-7-1999

Re: சமயம் கடந்த சதாவதானி  
on 10/31/2006 10:10:55 AM by Bhuvan
(சத)நூறு அவதானம் என்பது சாதாரணச் செயலன்று.

 பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் நிரம்பியிருந்த சபையில்
 அவர்களின் வினாக்களுக்கு விடையளித்து,
கவிதை புனைந்து,
சீட்டாடி,
தம் முதுகில் எறியப்பட்ட கற்கள் எத்தனை,
நெல் மணிகள் எத்தனை,
தாம் குடித்த நீர் எந்தக் கிணற்று நீர்,
 எத்தனை முறை மணி ஓசை எழுப்பப் பட்டது
எனத்
 தம் புலன்களுக்கும் மூளைக்கும் கொடுக்கப் பட்ட அத்தனைச் சோதனைகளிலும் வென்று
சதாவதானிப் பட்டம் பெறுவது சாதாரணச் செயலன்று.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது செய்குத் தம்பிப் பாவலர் அடக்கம் செய்யப் பட்ட இடத்தில் அவ்வூர் ஜமாஅத்தின் இடத்தையும் சேர்த்து பாவலருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டினார்.

 அவரே திறந்தும் வைத்தார்.
 
பாவலரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாடியதோடு, ஆண்டுதோறும் பாவலர் நினைவு நாள் அரசு விழாவாகவும் கொண்டாடப் படுகிறது.

 மேலும் அவ்வூர் அரசுப் பள்ளிக்கு சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அரசு மேநிலைப் பள்ளி என்றும் பெயர் மாற்றப் பட்டது.

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 20:48:29 | Permalink | Comments Off

THE FREEDOM FIGHTER WHO DECLINED THE THYAGI PENSION


     At a time when some freedom-fighters are running from pillar to post to avail thyagi pension from the government, a freedom-fighter Sadhavadhani Seygu Thambi Pavalar, who was offered thyagi pension declined to accept it in the early fifties.

        Sadhavadhani who hails from Nagercoil was born on 31 July,1874 as the third son of Pakeer Meeran sahib and Ameena.

        He had his earlier education at Edalakudi school where Malayalam was the medium of instruction as Nanjil Naadu was a part of Travancore Samasthanam then.

Though a bright student, he could not continue his studies due to poverty. Thereafter, he joined his father in his weaving profession. But his mind was inclined to education.

        His ardent desire for Tamil drove him to

        join theThinnai pallikoodam with Sankaranarayana Annavi as his guru in the adjacent Battariar Street. Pavalar’s involvement and dedication to Tamil language received the appreciation of his guru. Recalling

        his grandfather’s involvement in the Indian freedom struggle movement, Sheik Thambi, programme executive, All India radio, Thiruvananthapuram said that his grandfather associated himself with Mahatma Gandhi’s movement in the 1920s and most of his freedom struggle meetings in Nanjil Naadu were not without Pavalar’s participation.

       His extempore and humorous speeches had literary flavour which swayed the masses. There were no meetings without Seygu Thambi Pavalar in Nagercoil. More so he had the power of holding the crowd for hours together.

        Seygu Thambi Pavalar was an orator and an unrivalled scholar, who had the prodigious memory power to perform his Sadhavadhanam on 10 March,1907 at Madras Victoria Maharani Town Hall which was presided over by Vidwan Kannabiran Mudaliar and scholars like Mahavidwan Ramasamy Naidu, Thanjavur  Subramania lyer.Thiruvenkatasamy Naidu, who was the HoD of Tamil at Pachiappa’s College, Pulavar Namatchivaya Mudaliar, Thiru Vi Ka, TKC and The Hindu-Sudeshamithran newspaper editor G Subramania lyer participated and offered their felicitations to Pavalar.

 Thanjavur  Subramania lyer conferred the title of Mahamathi to Pavalar and the president of the function conferred on him the title of Sadhavadhani.

        During one of his visits, Mahatma Gandhi stayed at the third floor of Perumal Panicker building in Nagercoil and addressed a meeting organised there. Seygu Thambi enthralled the audience with his fiery speech full of wit and humour.

        Mahatma Gandhi complimented Pavalar by saying ‘If I could get one Pavalar in each language, I can get Indian Independence soon’. Seygu Thambi Pavalar’s involvement in the Indian freedom struggle movement was between 1920 to 1947.

    His keen interest in writing poems mostly on Indian freedom movement led him to edit two weeklies Edarthavathi and lslamiya Mithran during 1891.

        Pavalar was provided with the facility of free travel in a private bus, but it was withdrawn by the owner as he was actively involved in the freedom movement. Pavalar, who sacrificed everything for the sake of independence, showed no concern for this.

        The last meeting which Pavalar attended was at Thanjavur in 1950 and while on his return, he complained of chest pain and was bed-ridden for quite some time and his end came on 13 February, 1950.

   Pavalar’s son K P S Hamid, a retired Station Director, All India Radio, who passed away a few years ago maintained his father’s legacy in not accepting any benefits offered by successive governments.

        In a fitting tribute, a state-run school and a street in Edalakudi was named after him by the government of Tamilnadu.

        A mantapam in memory of Sadhavadhani in Edalakudi stands as a testimony to this freedom fighter which speaks volumes about his contribution to the Indian freedom struggle movement.

Posted by Blog Dedicated To Sheik Thambi Pavalar in 12:47:25 | Permalink | Comments Off